நியூசிலாந்துக்கு காத்திருக்கும் பெரிய சவால்? - எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள்
டி20 உலகக்கோப்பை தொடரை விட இனிமேல் தான் நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய சவால் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தொடருக்கு பின் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இந்திய தொடருக்கு புதிய வீரர்களை கொண்ட அணியை களமிறக்காமல் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற அதே அணியே விளையாடும் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே வீரர்களின் நிலையை கொண்டு, கிரிக்கெட் அட்டவணையை தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கிரிக்கெட் வல்லுனர்கள் கூறியுள்ளனர். இப்படி மன தளவிலும், உடல் அளவிலும் தொய்வாக இருக்கும் வீரர்களால் எப்படி விளையாட முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.