தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசின் அறிவிப்பு...!
M K Stalin
Government of Tamil Nadu
By Petchi Avudaiappan
பேருந்து பயணம் மேற்கொள்ளும் தமிழக மக்களுக்கு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 18ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினம் தமிழக பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் மார்ச் 19இல் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வில் துறை ரீதியிலான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்றைய தினம் சட்டசபையில் போக்குவரத்துத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
அப்போது போக்குவரத்து துறையில் மொத்தம் 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்.
அதில்,
- 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பஸ்களிலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
- தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் முறை, பண பரிவர்த்தனையற்ற பயணச் சீட்டு முறையை அறிமுகப்படுத்துதல்.
- விழா நாட்களை தவிர்த்து பிற நாட்களில் ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு 10% தள்ளுபடி.
- சென்னை, திருச்சி மற்றும் விழுப்புரத்தில் உள்ள அரசு தானியங்கி பணிமனை நவீனமயமாக்கல் மற்றும் தரம் உயர்த்தப்படும்.
- அரசின் தானியங்கி பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசுத்துறை வாகனங்களை ஆய்வு செய்வதற்காகவும் பராமரிப்பதற்காக அரசு நடமாடும் பணிமனைகள் உருவாக்கப்படும்.
- அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் ஒருங்கிணைந்த பயணிகள் குறைதீர்க்கும் உதவி மையம் அமைக்கப்படும்.
- பயண கட்டண சலுகை அனுமதி சீட்டுகளை பெறுவதற்காக பயணம் மேற்கொள்வதை குறைக்கவும், எளிதாகவும், வசதியானதாகவும் பயணச் சீட்டுகள் பெறுவதற்கு அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களின் வலைதளம் அல்லது இ-சேவை மையம் வாயிலாக இணையதள பயணச்சீட்டு வழங்கும் ஏற்பாட்டு முறை அறிமுகப்படுத்தப்படும்.
- பஸ்களின் வருகை, புறப்பாடு குறித்த நிகழ்நேரத் தகவல்கள் மதுரை மற்றும் கோவை நகரங்களில் மொத்தம் 16 பஸ் முனையங்களில் இணையவழி தகவல் அமைப்பு மூலமாக காட்சிப்படுத்தப்படும்.
- பள்ளி வாகனங்களுக்கு முன்புறம் மற்றும் பின்புறம் கேமராவுடன் சென்சார் கருவிகள் பொருந்துதப்படும்.
- ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உருவாக்கப்படும்.
- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உருவாக்கப்படும்
- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தினை வட்டார போக்குவரத்து அலுவலக தரம் உயர்த்தப்படும்.
- பொதுமக்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரடியாக வராமலேயே ஓட்டுநர் உரிமத்தில் வாகன வகை ஒப்புவிப்பு செய்தல், போக்குவரத்து அல்லாத வாகன உரிமை மாற்றத்தை தெரிவித்தல் மற்றும் பதிவு சான்றிதழ் தவணைக் கொள்முதல் விவரத்தினை மேற்குறிப்பு செய்தல் ஆகிய சேவைகளை கணினி வழியாக பெற நடவடிக்கை.
- திருச்சி,விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஓட்டுநர் பயிற்சி மையம் அமைக்கப்படும்.