மேகதாது அணைகட்டுவதில் பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை :கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அதிர்ச்சி தகவல்

minister karnataka meghadadudam basuvaraj
By Irumporai Jul 28, 2021 11:24 AM GMT
Report

மேகதாது அணை கட்டுவதில் இருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என புதிதாக பொறுப்பேற்ற கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மாய் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசு, மேகதாதுவில் அணையை கட்ட திட்டமிட்டுள்ள நிலையில் காவிரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டதமிழக விவசாயிகளின் நலனை பேணிக்காக்க தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், எவ்வித அனுமதியும் பெறாமல் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முயற்சித்து வருகிறது.

கர்நாடகாவில் அரசியல் நெருக்கடி காரணமாக எடியூரப்பா ராஜினாமா செய்த நிலையில் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று பொறுப்பேற்றார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மாய் .

மேகதாது அணை கட்டுவதில் இருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. அணை கட்டும் விவகாரத்தில் பிரதமர், நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து அனுமதி பெறுவோம் என கூறினார்.

புதிய முதல்வர் பசவராஜ் பொம்மை நீதிமன்ற உத்தரவை பின்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பசவராஜின் கருத்து  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.