"பாரத்" என்ற பெயர் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை...டி.ஆர்.பாலு

Tamil nadu DMK BJP India
By Karthick Sep 05, 2023 08:27 AM GMT
Report

இந்தியா என்ற பெயர் பாரத் என பெயர் மாறுதல் பெறவுள்ளதாக கருத்துக்கள் வலுவாக கூறப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாக திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு கருத்து தெரிவித்துள்ளார்.

பெயர் மாறுகிறதா இந்தியா..?

ஜி 20 மாநாடு அழைப்பிதழ் இந்தியாவில் நடைபெறத்தவுள்ள ஜி 20 மாநாடு அழைப்பிதழில் இந்திய குடியரசு தலைவர் என அச்சிடப்படாமல், பாரத் குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

no-surprise-in-name-change-of-india-says-tr-balu

இதன் காரணமாக இந்திய நாட்டின் பெயர் பாரத் என மாற்றப்படுமா? என்ற கேள்வி பல்வேறு வகையில் எழுப்பப்பட்டு வருகின்றது. இதில், தற்போது திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு கருத்து தெரிவித்துள்ளார்.

"பாரத்" என்ற பெயர் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இது குறித்து பேசும் போது, அரசியல் சாசனத்திலேயே பாரதம் என்ற பெயர் உள்ளது என குறிப்பிட்டு, அதனால் பாரத் என்ற பெயரை எதிர்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.

no-surprise-in-name-change-of-india-says-tr-balu

மேலும், வரும் நாடாளுமடன்ர தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி 'இந்தியா' என பெயர் வைத்துள்ளதால் இந்தியா என்ற வார்த்தையை பயன்படுத்த பாஜக அஞ்சுகிறது என குற்றம்சாட்டிய அவர், பெரும்பான்மை இருப்பதால் பா.ஜ.க எதையும் செய்ய நினைக்கிறது என்றும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக என்பது தற்போது வரை தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.