ஆதிலிங்கத்துடன் தொடர்பும் இல்லை....சம்மனும் வரல...வரலக்ஷ்மி சரத்குமார் விளக்கம்
என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஆதிலிங்கத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என வரலக்ஷ்மி சரத்குமார் தனியார் தொலைக்காட்சி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
உதவியாளர் கைது
கேரள மாநிலம், விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருட்கள், ஆயுதங்கள் கடத்திய வழக்கில் ஆதிலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார். என்.ஐ.ஏ. நடத்திய விசாரணையில் ஆதிலிங்கம் என்பவர் நடிகை வரலட்சுமியிடம் உதவியாளராக இருந்தது தெரியவந்தது.
போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய பிரமுகரான குணசேகரன் என்பவருடன் ஆதிலிங்கம் தொடர்பில் இருந்ததும், போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை திரைத்துறையில் ஆதிலிங்கம் முதலீடு செய்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வரலக்ஷ்மிக்கு சம்மன்
இந்நிலையில், நடிகை வரலட்சுமியின் உதவியாளர் குறித்து தகவல்களை திரட்டுவதற்காக என்.ஐ.ஏ. விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நடிகைக்கு சம்மன் விடுத்துள்ளது. தற்பொழுது ஆந்திராவில் படப்பிடிப்பில் இருப்பதால் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக இயலாது என என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் வரலட்சுமி தெரிவித்துள்ளார் என தகவல் வெளிவந்தது.
இந்நிலையில், இது குறித்த தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், தன்னிடம் வேலை பார்த்த ஆதிலிங்கம் 5 ஆண்டுகளுக்கு முன்பே வேலையில் இருந்து நின்றுவிட்டார் என்றும் ஆதிலிங்கம் தொடர்பாக NIA அதிகாரிகள் தனது தாயாரிடம் விசாரணை நடத்தினர் என்று கூறி, விசாரணைக்கு தன்னை யாரும் அழைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.