குரூப் 2 தேர்வர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிந்து தேர்வறைக்கு செல்ல தடை - முக்கிய அறிவிப்பு

By Swetha Subash May 11, 2022 02:26 PM GMT
Report

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவையான ஊழியர்களை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து வருகின்றனர். இதில் பல்வேறு போட்டித்தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தேர்வுகள் குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்று வகைபடுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே அரசுப் பணிகளில் குரூப்2-க்கான நேர்காணல் பணியிடங்களில் 116 காலிப்பணியிடங்களையும், நேர்காணல் இல்லாத குரூப் -2 ஏ பணியிடங்களில் 5 ஆயிரத்து 413 காலியிடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை பிப்ரவரி 23-ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

குரூப் 2 தேர்வர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிந்து தேர்வறைக்கு செல்ல தடை - முக்கிய அறிவிப்பு | No Smart Watches And Mask Mandatory In Group2 Exam

இதற்கு பிப்ரவரி 23-ம் தேதி முதல் மார்ச் மாதம் 23 ஆம் தேதி வரை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் தேர்வுகள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களை விட இந்த ஆண்டு 60 விழுக்காடு பட்டதாரிகள் அதிகமாக விண்ணப்பித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள இந்த தேர்வு மே 21-ம் தேதி நடக்கவுள்ளது.

இந்நிலையில் குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின்‌ இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in மூலமாக தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ (ஓடிஆர்) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண்‌ மற்றும்‌ பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம்‌ செய்ய முடியும்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் குரூப் 2 தேர்வர்களுக்கு புது அறிவிப்பு ஒன்றை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 2 தேர்வெழுத வரும் தேர்வர்கள் முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் தேர்வறையில் தேர்வு எழுதும் போதும் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிந்து தேர்வறைக்கு செல்ல தடை விதிப்பதாகவும் அறிவித்துள்ளது.