தமிழகத்தில் எங்கேயும் மருந்து தட்டுப்பாடு இல்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

DMK Ma. Subramanian
By Irumporai Sep 14, 2022 05:07 AM GMT
Report

தமிழகத்தில் எங்கேயும் மருந்து தட்டுப்பாடு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினார்.

மருந்து தட்டுப்பாடு இல்லை

அப்போது பேசிய அவர், தமிழகத்தில் எங்கேயும் மருந்து தட்டுப்பாடு இல்லை. ஒருசில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டால் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எங்கேயும் மருந்து தட்டுப்பாடு இல்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் | No Shortage Of Medicine Minister M Subramanian

 நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும், மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் மருந்துகள் வழங்கப்படுகிறது. தவறுகள் ஏதும் கண்டறியப்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரை தட்டுப்பாடு ஏற்படுவதாக மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுருந்த, இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.