யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது : ஓபிஎஸ் கருத்து

Tamil nadu AIADMK
By Irumporai Apr 23, 2022 11:22 AM GMT
Report

தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது தெளிவாகிறது என ஓபிஎஸ் ட்வீட். நெல்லை சுத்தமல்லி அருகே பழவூரில் கோயில் கோடை விழா நடைபெற்றுள்ளது.

இந்த விழாவை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவிடம், முத்துசாமி மகன் ஆறுமுகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆறுமுகம் கடந்த ஒரு மாதத்திற்கு முன் குடிபோதையில் வாகனம் ஒட்டியதாக அபராதம் விதித்தது குறித்து ஆறுமுகம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், கையில் வைத்திருந்த கத்தியை வைத்து குத்தியுள்ளார். இதில் படுகாயமைடந்த பெண் காவலரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்புக்கு நின்ற பெண் காவலருக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், தனது ‘திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூரில், கடமையைச் செய்த பெண் காவல்துறை உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா அவர்கள் கத்தியால் கழுத்தறுக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்ற செய்தியை பார்க்கும்போது, தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது தெளிவாகிறது.

தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டாலும், அவரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தரவும், இதுபோன்ற சம்பவம் இனி நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.