அஜித் ரசிகர்களின் ஏமாற்றத்திற்கு காரணமாகிய முன்னணி தொலைக்காட்சி - காரணம் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் நடிகர் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ திரைப்படம் வரும் 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாக இருக்கிறது.
எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வழங்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
படத்தில் ஹிந்தி நடிகை ஹீமா குரேஷி முக்கிய கதாப்பாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும், நடிகர் யோகி பாபு நகைச்சுவை கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
படத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கும் ரசிகர்கள் இப்பொழுதே திரையரங்கு வாசல்களில் வரிசைக்கட்டி நிற்க தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், அஜித்தின் பெரும்பாலான படங்களின் சேட்டிலைட் உரிமைகள் சன் டிவி வசமே உள்ளது. சிவா இயக்கத்தில் அவர் கடைசியாக நடித்த விஸ்வாசம் திரைப்படம் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.
முன்னணி நடிகரான அஜித்தின் படங்களை வாங்க பல சேனல்கள் போட்டி போட்டு வருகிறது.
ஆனால் தமிழகத்தில் முன்னணி பொழுதுப்போக்கு தொலைக்காட்சி ஒன்று இதுவரை எந்தவொரு அஜித் படத்தையும் வாங்காதது அஜித் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.