தடுப்பூசி சான்றிதழ் சமர்பிக்காவிட்டால் சம்பளம் கிடையாது - அரசு ஊழியர்களுக்கு ஆப்பு
அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சமர்பித்தால் மட்டுமே சம்பளம் அளிக்கப்படும் என பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த இரு வருடங்களாக பெரும்பாடு படுத்தி வரும் கொரோனா தொற்றை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள், பரிசுகள் என அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சமர்பித்தால் மட்டுமே சம்பளம் அளிக்கப்படும் என பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிக்கையில் அரசு ஊழியர்கள் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.இல்லாவிட்டால் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும்.
இது தொடர்பான சான்றிதழ்களை பஞ்சாப் அரசாங்கத்தின் இணையதளத்தில் அரசு ஊழியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றினால் தான் சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.