இது ஓயோ இல்லை; காரில் ரொமான்ஸ் செய்யும் ஜோடிகள் - டிரைவரின் வைரல் வாசகம்!
டிரைவர் ஒருவர் தனது வாகனத்தில் ஒட்டியுள்ள நோட்டீஸ் வைரலாகி வருகிறது.
காரில் அநாகரீகம்
ஹைதராபாத், கேப் டிரைவர் செய்த ஒரு சம்பவம் படுவைரலாகி வருகிறது. காரின் பின்பக்க இருக்கையில் ஒரு காகிதத்தில் ஒரு அறிவிப்பு எழுதி ஒட்டியுள்ளார்.
அவர் காரின் பின்பக்க இருக்கையில் ஒரு காகிதத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எச்சரிக்கை. ரொமான்ஸ் கூடாது. இது கேப். உங்களின் ப்ரைவேட் இடமோ அல்லது ஓயோவோ இல்லை.
வைரல் நோட்டீஸ்
அதனால் சமூக இடைவெளிவிட்டு சற்று அமைதியாக இருங்கள் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, டெல்லி மற்றும் பெங்களூரில் இதுபோன்ற வார்னிங் மெசேஜ்கள் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள், இந்த வாடகை கார் ஓட்டுநர் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் கனிவான முறையில் தன்னுடைய கோரிக்கையை முன் வைத்துள்ளது போன்ற கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.