கொரோனா வேகமெடுப்பிலும் மதுக்கடைகளுக்கு கட்டுப்பாடுகள் இல்லாதது ஏன்?

covid public liquor tasmac
By Jon Apr 08, 2021 04:53 PM GMT
Report

கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதும் மதுக்கடைகளுக்கு மட்டும் எந்த கட்டுப்படும் இல்லாதது ஏன்? என்ற கேள்வி எழுந்ததுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோயின் இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு சுமார் 4000 பேருக்கு சொர்ண தோற்று உறுதியாகி வருகிறது.

அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 10 தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளன. குறிப்பாக திரையரங்குகளில் மீண்டும் 50 சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதி போன்ற கட்டுப்பாடுகள் கொண்டு வரவுள்ளன.

இவ்வாறு கட்டுப்பாடுகள் கொண்டுவரவுள்ள நிலையில் அதிகமான வாடிக்கையாளர்கள் கூடும் மதுபான கடைகளுக்கு எந்த விதமான பிரத்யேக கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாதது சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அதிகமாக பரவும் சூழலில், மதுபான கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.