அதிமுக பாஜக கூட்டணி - எந்த பிரச்னையும் எங்களுக்குள்ள இல்ல - செல்லூர் ராஜு

ADMK BJP Narendra Modi K. Annamalai Sellur K. Raju
By Karthick Sep 21, 2023 07:32 AM GMT
Report

செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தங்களுக்கும் பாஜகவிற்கும் எந்த வித பிரச்னையும் இல்லை என தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜு

செய்தியாளர் சந்திப்பு இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அண்ணா பெரியார் காலத்திலேயே இங்கு சமூகநீதி வந்துவிட்டது என்று கூறி, விளையாட்டு துறை அமைச்சர் இன்னும் விளையாட்டாக உள்ளார் என விமர்சித்தார்.

no-problem-with-bjp-says-admk-sellur-raju

மேலும், திமுகவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருத்தரை கட்சியின் முக்கிய பொறுப்பிற்கு வரவைப்பார்களா என உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய செல்லூர் ராஜு, 69% இடஒதுக்கீடை வழங்கியது அதிமுக தான் என பெருமிதம் கூறினார்.

தேர்தலுக்காக இவர்கள் ஏதாவது பேசிவருவார்கள் என்று விமர்சித்து சிறுபான்மையினரின் வாக்குகளை கவருவதற்காக திமுக பேசுவார்கள் என தனது விமர்சனத்தை முன்வைத்தார். 1000 ரூபாய் கொடுத்தது மிகவும் எதிர்ப்புகளை தான் இவர்கள் சம்பாதித்துள்ளதாக கூறிய செல்லூர் ராஜு, மக்களுக்கு தங்கள் மீதுள்ள கோவத்தை கட்டுப்படுத்துவதற்காக திமுகவினர் பேசுவார்கள் என சாடினார்.

எந்த பிரச்னையும் இல்லை

மேலும், பாஜகவுடனான கூட்டணி குறித்தான கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜு, தங்கள் எப்போதும் பாஜகவுடன் பிரச்சனை என பேசினோமா? என வினவிய அவர், அதிமுகவை பாஜகவின் தேசிய தலைவர்கள் மோடி, அமித் ஷா, நட்டா போன்றோர் மதிக்கின்றனர் என குறிப்பிட்டு, மாநில தலைவர் இவ்வாறு பேசுகிறாரே என்ற வருத்தத்தை தான் தங்கள் பதிவு செய்ததாக விளக்கமளித்தார்.

no-problem-with-bjp-says-admk-sellur-raju

தொடர்ந்து பேசிய அவர், தாங்களும் அடுத்த பிரதமராக மோடி தான் வரவேண்டும் என எண்ணுவதாக குறிப்பிட்டு, தங்களுக்கும் பாஜகவிற்கும் எந்த பிரச்னையும் இல்லை என அழுத்தம் திருத்தமாக கூறினார்