லாக்டவுன் வரைக்கும் மின் தடை இல்லை .. தமிழக அரசு அறிவிப்பு!
ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் மின் தடை இருக்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளதாவது:
கொரோனா காரணமாக மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
மேலும், மின் பராமரிப்பு பணிக்காக மின்வாரியத்தால் தரப்படும் மின் தடை ஊரடங்கு முடியும் வரையில் ஒத்திவைக்கப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் 07.06.2021 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளமையால் வீட்டிலிருந்து பணிபுரிவது, ஆன்லைன் வகுப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தடையில்லா மின்சாரம் வழங்கும் நோக்கில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. pic.twitter.com/4HJWw5MrrF
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) June 2, 2021
தற்போது தவிர்க்க முடியாத பராமரிப்பு பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் ,மாணவ்ர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடக்க தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.