யுபிஐ சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை : மத்திய அரசு விளக்கம்

By Irumporai Aug 22, 2022 04:40 AM GMT
Report

ஆன்லைன் பணப் பரிவர்த்தனை எனப்படும் யு.பி.ஐ சேவைகளுக்கு எந்த விதக் கட்டணமும் வசூலிக்க அரசாங்கத்தில் எந்த விதப் பரிசீலனையும் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

யுபிஐ சேவைகளுக்குக் கட்டணம்

நாட்டில் தற்போது சிறு பெட்டிக் கடைகள் தொடங்க சிறு வியாபாரிகள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்திலும் யு.பி.ஐ மூலம் பணம் பெறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் ஆன்ட்ராய்டு மொபைல் மூலம் யுபிஐ முறையில் பணப் பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர்.


நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 600 கோடி ரூபாய் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் யுபிஐ சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகத் தகவல் பரவியது.

கட்டணம் கிடையாது

இந்த தகவல் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், யுபிஐ பணப் பரிவர்த்தனை சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யுபிஐ சேவைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் இல்லை : மத்திய அரசு விளக்கம் | No Plans Charge For Upi Service Finance Ministry

யுபிஐ சேவையை வழங்கும் நிறுவனங்கள் மற்ற வழிகள் மூலம் செலவுகளை ஈட்டிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தகவல் மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.