பாமக இல்லையென்றால் கலைஞருக்கு மெரினாவில் நினைவிடம் இல்லை...அன்புமணி ராமதாஸ்
பாமக இல்லையென்றால் கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்திருக்க முடியாது என கூறி, ஆனால் தங்கள் பொதுக்கூட்டத்தை நடத்தவிடாமல் தமிழக அரசு தடுத்து வருகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக ஆண்டு விழா
பாட்டாளி மக்கள் கட்சி துவங்கப்பட்டு 35 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், கடலூரில் ஆண்டு விழா நடத்த அனுமதி கோரிய நிலையில் அதனை நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்நிலையில், இதற்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றார்.
நேற்று அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாமகவின் 35ம் ஆண்டு துவக்க விழாவினை நடத்த தமிழக அரசு தடை விதித்தது கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டு, தங்களை வன்முறை கட்சி என்று பேசுகிறார்கள் என்றும் தாங்கள் பேச ஆரம்பித்தாள் தாங்க மாட்டார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
கலைஞரை அடக்கம் செய்திருக்கமுடியாது
கடந்த 35 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை பாமக தான் கொண்டு வந்துள்ளோம் என அடுக்கடுக்கான நல திட்டங்களை பட்டியலிட்டார். தொடர்நது பேசிய அவர, பாமக இல்லை என்றால் கலைஞரை மெரினாவில் அடக்கம் செய்திருக்க முடியாது என்றும் தாங்கள் போட்ட வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் மெரினா கடற்கரையில் கலைஞரை அடக்கம் செய்திருக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், பாமகவின் தயவால் தான் கலைஞர் 2006ம் ஆண்டு 96 எம்எல்ஏக்களை வைத்து கொண்டு 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார் என குறிப்பிட்டு, என்எல்சிக்கு அடிமையாக திமுக அரசு இருந்து வருகிறது என குற்றம்சாட்டினார்.
என்எல்சி விவகாரத்தில் பாமக தொடர்ந்து பொதுமக்களுக்காக பாடுபட்டு வரும் என தெரிவித்த அவர், ஸ்டெர்லைட் எதிராக திமுக செய்த வன்முறை சம்பவங்கள் போன்ற பல சம்பவங்களை சொல்ல முடியும் என தெரிவித்தார். சட்ட போராட்டம் நடத்தி கடலூரில் பொதுக்கூட்டம் நடத்த முன்னெடுப்புகள் எடுக்கப்படும் என்றும் அன்புமணி உறுதிபட தெரிவித்தார்.