கேரளா அமைச்சரவையில்.. கே.கே சைலஜாவுக்கு இடமில்லையா?- கட்சி தீர்மானத்தால் திடீர் திருப்பம்
kerala
cabinet
kksailaja
By Irumporai
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான புதிய அமைச்சரவையில் தற்போதைய சுகாதார அமைச்சர் கே.கே சைலஜா இடம்பெறவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது.
கேரளாவில் தொடர்ந்து இரண்டாவது முதல்வராக பதவியேற்கவுள்ள பினராயி விஜயனைத் தவிர்த்து அமைச்சரவையில் புது முகங்கள் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் உலக புகழ் பெற்ற கேரளா சுகாதார அமைச்சராக இருந்த கே கே சைலஜா பினராயி விஜயன் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பினராயி விஜயன் வரும் 20-ஆம் தேதி கேரள முதல்வராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.