இவருக்கு ஏண்டா டீம்ல இடம் கொடுக்கல..கடும் கோபத்தில் இந்திய அணி ரசிகர்கள்
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி.20 போட்டிக்கான இந்திய அணியில் சாஹலுக்கு இடம் கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் புதிய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இஷான் கிஷன், ருத்துராஜ் கெய்க்வாட், ஆவேஸ் கான் போன்ற வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
வெங்கடேஷ் ஐயர் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். அதே போல் ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சிராஜ் போன்ற வீரர்களும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், இந்த போட்டியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கொடுக்காத இந்திய அணியின் முடிவு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காரணமே இல்லாமல் சாஹல் போன்ற சிறந்த வீரரை தொடர்ந்து புறக்கணிப்பது சரியான முறை அல்ல என ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
No place for Chahal in the team..what a poor selection call ? #IndvsNZ #IndVNZ
— Virat (@Virat0000018) November 17, 2021