‘‘என்னுடைய புத்தகங்களை யாரும் வாங்காதீங்க’’: தலைமை செயலாளர் இறையன்பு அறிக்கை!

statement chiefsecretary
By Irumporai May 11, 2021 09:58 AM GMT
Report

தாம் எழுதிய நூல்களை யாரும் வாங்க வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறைக்கு தலைமை செயலர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்:

நான் பணி நேரம் முடிந்த பின்பும் விடுமுறை நாட்களிலும் எனக்கு தெரிந்த தகவல்களை வைத்தும் என் அனுபவங்களை தொடுத்தும் சில நூல்களை எழுதி வந்தேன்.

அவற்றிலுள்ள பொருண்மை கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியிலே முத்தாக கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை.

தற்போது உள்ள பொறுப்பின் காரணமாக பள்ளி கல்வித்துறைக்கு நான் ஒரு மடல் எழுதி உள்ளேன்.

நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வர பெற்றாலும் தலைமை செயலராக பணியாற்றும் வரை எந்த திட்டத்தின் கீழும் வாங்க கூடாது என்கின்ற உத்தரவே அது.

பார்ப்பவர்களுக்கு என் பணியின் காரணமாக அது திணிக்கப்பட்டு இருப்பதாக தோன்றி களங்கம் விளைவிக்கும் என்பதால் தான் இத்தகைய கடிதத்தை எழுதி இருக்கிறேன்.

எந்த வகையிலும் என் பெயரோ, பதவியோ தவறாக பயன்படுத்தக்கூடாது என்று எனது நோக்கம். அரசு விழாக்களில் பூங்கொத்துக்கு பதிலாக புத்தகங்கள் வழங்கினால் நன்றி என்கின்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட ஆணை அது. அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பது ஆக எண்ணி என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துக்கு பதில் விநியோகிக்க வேண்டாம் என்று அன்புடன் விண்ணப்பம் வைக்கிறேன்.

,அரசு செலவாக இருந்தால் தொடர்பு அதிகாரி தமது வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படும்.

செலவு செய்வதை தவிர்ப்பது சிறந்தது . எனவே இத்தகைய சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார். 

‘‘என்னுடைய புத்தகங்களை யாரும் வாங்காதீங்க’’: தலைமை செயலாளர் இறையன்பு அறிக்கை! | No One My Books Chief Secretary Statement