இந்த கிராமத்தில் எந்த வீட்டிலும் சமைக்கவே மாட்டாங்க - ஏன் தெரியுமா?

Gujarat
By Sumathi Sep 26, 2024 07:30 PM GMT
Report

கிராமம் ஒன்றில் எந்த வீடுகளிலும் மக்கள் சமைப்பது இல்லையாம்..

சந்தன்கி 

குஜராத், சந்தன்கி என்ற கிராமத்தில் சுமார் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 500க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். அதில் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள்.

chandanki

இளைஞர்கள் பெரும்பாலும் படித்து முடித்தப் பிறகு, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் இங்கு ஒருவரது வீட்டில் கூட சமையல் செய்ய மாட்டார்களாம். இதன் பின்னணியில் பாரம்பரிய காரணம் ஒன்று உள்ளது.

ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா - ஆசியாவிலேயே 3வது இடம்!

ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா - ஆசியாவிலேயே 3வது இடம்!

சமூக சமையல் கூடம் 

என்னவென்றால், வயது முதிர்ந்த மூத்த குடிமக்களுக்கு, தனிமை விரக்தி வந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த முறையை பின்பற்றுகின்றனர். மாற்றாக அந்த ஊருக்கு பொதுவாக ஒரு சமூக சமையல் கூடம் உள்ளது.

இந்த கிராமத்தில் எந்த வீட்டிலும் சமைக்கவே மாட்டாங்க - ஏன் தெரியுமா? | No One Cook Food Home In Gujarat Village

அனைத்து மக்களுக்கும் தினசரி அங்குதான் சமையல் செய்யப்படுகிறது. இதற்காக ஒரு நபருக்கு மாதம் ரூ.2,000 செலுத்தினால் போதும். மாதம் ரூ.11,000 ஊதியத்தில் ஒரு சமையல் காரர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இதன் மூலம் வயது முதிர்ந்தவர்களுக்கு நல்ல ஓய்வு கிடைப்பதுடன், அவர்கள் தங்களுக்கு விருப்பமான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.