ஆண்டவனால் கூட எங்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியாது - செல்லுார் ராஜு
ஆண்டவனால் கூட எங்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு தெரிவித்துள்ளார்.
பிரதமரை புகழ்ந்து தள்ளிய செல்லுார் ராஜு
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகிற 11 ஆம் தேதி மதுரை வந்து மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், அதிமுக கட்சியின் வளர்ச்சி குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மோடி ஜி சிறப்பாக செயல்படுகிறார், தமிழ் மொழியை உலக அளவில் கொண்டு போகிறார். இதுவரை இது போன்ற பாரத பிரதமரை நாங்கள் பார்த்ததில்லை என்றார்.
எவனாலும் நெருக்கடி கொடுக்க முடியாது
செய்தியாளர் ஒருவர் காலையில ஆவேசமாக பேசுகிறீர்கள் மாலை பின் வாங்கி பேசுறீங்க ஏதும் நெருக்கடி இருக்கா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், எங்களுக்கு நெருக்கடி கொடுக்க எவனாலும் இல்ல..ஆண்டவனால் கூட முடியாது என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு என்ற பெயரில் அறையிலேயே உட்கார்ந்து பேசிட்டு போவதாக விமர்சனம் செய்தார்.