தற்போதைக்கு இலங்கையின் பொருளாதாரத்தை யாராலும் சரி செய்ய முடியாது - அய்யநாதன்..!
தற்போதைக்கு இலங்கையின் பொருளாதாரத்தை யாராலும் சரி செய்ய முடியாது என அரசியல் விமர்சகர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஐபிசி தமிழுக்கு நேர்காணல் அளித்த அவர் பேசுகையில், மக்கள் கேட்டது மாற்றம் ஆனால் கோட்டபய ராஜபக்ச பண்ணது ஏற்பாடு.
இலங்கை மக்கள் இந்த ஆட்சி வேண்டாம் என்று தான் தங்கள் போராட்டங்களை தொடர்ந்து வருகின்றனர். அதிபர் கோட்டபய ராஜபக்ச ஏமாத்திடலாம் என்று நினைக்கிறார்.
இலங்கை போலீஸ் மற்றும் ராணுவத்தை அடக்குமுறை கருவியாக தான் பார்க்கிறார்.அதை இறக்கிவிட்டு இந்த போராட்டத்தை மக்களை சிதறிடித்துவிடலாம் என்று நினைக்கிறார் என்றார்.
சிங்கள பௌத்தர்கள் என்று சொல்லக்கூடிய மத்திய தென்னிலங்கை மக்களால் தானே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.
அவர்களே இவர்களை எதிர்த்து போராடுகிறார்கள் அப்போ இவுங்க அரசியல் அடித்தளமே அடிப்பட்டு போயிடுச்சு என்றார்.
மேலும் முழு வீடியோவை காண கீழே உள்ள வீடியோவை க்ளிக் செய்யவும்.