அமைச்சர் பொன்முடி பேச்சு எதிரொலி ; ஓசி டிக்கெட் வேண்டாம்...பேருந்தில் கொந்தளித்த பாட்டி
அரசுப் பேருந்து ஒன்றில் பாட்டி ஒருவர் ஓசி டிக்கெட் வேண்டாம் என்று கூறி பணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாட்டி அட்ராசிட்டி
கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் எல்லாம் ஓசி டிக்கெட்டில் பயணம் செய்வதாக குறிப்பிட்டிருந்தார்.
அவரின் பேச்சு இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, பெண்கள் குறித்து அவதுாறாக பேசியுள்ளதாக கூறி எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் அரசுப் பேருந்தில் சென்ற மூதாட்டி ஒருவர் எனக்கு ஓசி டிக்கெட் வேண்டாம் எனக் கூறி நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் தமிழகமே ஓசி டிக்கெட்டில் வந்தாலும் நான் வர மாட்டேன். இந்தா காசு பிடி எனக் கூறி நடத்துநரிடம் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்றார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
OC Ticket வேண்டாம்! Super பாட்டி? pic.twitter.com/C905YEgKmB
— Singai G Ramachandran (@RamaAIADMK) September 29, 2022