தமிழகத்தில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறதா ? - ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன?
மைக்ரான் தொற்றுக்கு 34 பேர் ஆளாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
ஒமைக்ரான் பரவல் மேலும் அதிகரிக்காத வகையில் அதை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு திட்டங்களை தீட்ட முன்வந்துள்ளது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நண்பகல் 12 மணியளவில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை முதலமைச்சருடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது
தொற்று 10% அளவில் நெருங்கும் பட்சத்தில் ஊரடங்கை அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளது.
சுகாதாரத்துறையில் ஒப்பந்த பணியாளர்களின் பணி காலத்தை மேலும் நீட்டிப்பு செய்யவும் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தீவிர அவசர கட்டுப்பாட்டு மையங்களை மீண்டும் தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒமைக்கிரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் முதல்-அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.