பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவையில்லை - யாருக்கெல்லாம் அனுமதி?

Government Of India
By Thahir Mar 28, 2023 09:20 AM GMT
Report

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பான் அட்டைதாரர்களுக்கு நிபந்தனைகளுடன் விலக்கு அறிவித்துள்ளது மத்திய அரசு.

பான் கார்டு -ஆதார் எண் இணைப்பு

வரி ஏய்ப்பு, மோசடி பணப் பரிவர்த்தனைகள் போன்றவற்றை தவிர்க்க மக்கள் அனைவரும் பான் கார்டுடன் - ஆதார் எண்ணை இணைக்க வருமான வரித்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவையில்லை - யாருக்கெல்லாம் அனுமதி? | No Need To Link Aadhaar Number With Pan Card

இதற்கான கால அவகாசத்தினை நடப்பாண்டு மார்ச் 31 வரை வழங்கியுள்ளது. ஏப்ரல் 1-க்கு பிறகு ஆதார் எண் இணைக்காவிட்டால் பான் கார்டுடன் உள்ள அனைத்து பணப் பரிவர்த்தனைகளும் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருமான வரிச் சட்டம் ,1961 இன் படி சிறப்பு விலக்கு நிபந்தனைகள் வெளியிட்டுள்ளது. இதன் படி யாருக்கெல்லாம் ஆதார் இணைப்பு அவசியமில்லை என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

சிறப்பு நிபந்தனைகள் 

இந்த அறிக்கையின் படி வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர் ஐ ) , 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மூத்தக்குடிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும் ,அசாம் ,மேகாலயா ,ஜம்மு -காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் வசிப்பவர்கள், அந்த மாநிலங்களின் சிறப்பு நிபந்தனைகள் காரணமாக ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டிய அவசியமில்லை.

தனிநபர் இல்லாத நிறுவனங்கள் ,அறக்கட்டளைகள் பான் கார்டுடன் ஆதார் எண்னை இணைக்க வேண்டிய தேவை இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது .