உணவுக்கு மதம் உண்டா? முஸ்லிம் டெலிவரி மேன் வேண்டாம் - சர்ச்சையாகும் பதிவு
ஸ்விக்கி வாடிக்கையாளர் ஒருவர் உணவு ஆர்டர் செய்த போது முஸ்லிம் டெலிவெரி மேன் வேண்டாம் என மெசேஜ் அனுப்பிய ஸ்கீரின் ஷாட் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்து உண்ணும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது.
இதனால் ஸ்விக்கி மற்றும் சோமோட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி நிறுவனங்களில் கல்லுாரி பயிலும் மாணவர்கள் , இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பலரும் பணியாற்றி வருகின்றனர்.

கிளம்பிய சர்ச்சை
ஹைதராபாத்தில் சேர்ந்த ஸ்விக்கி வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்துள்ளார்.
அப்போது அவர் ஒரு பதிவை ஸ்விக்கி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார். அதில் உணவை டெலிவரி செய்ய முஸ்லிம் மத்தத்தைச் சேர்ந்தவரை அனுப்ப வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் ஸ்கிரீன் ஷாட்டை தெலுங்கானா மாநில டாக்ஸி மற்றும் டிரைவர்கள் ஜேஏசியின் தலைவர் ஷேக் சலாவுதீன் என்பவர் தனது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டு நடவடிக்கை எடுக்குமாறு ஸ்விக்கி நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஸ்கிரீன் ஷாட் வைரலான நிலையில் ஸ்விக்கி நிறுவனம் இதுவரை பதிலளிக்கவில்லை.
அண்மையில் ஹைதராபாத்தில் முஸ்லிம் டெலிவரி மேன் கொண்டு வந்த உணவை ஆர்டர் செய்த நபர் வாங்க மறுத்த சம்பம் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.