கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சிபாரிசு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை

By Swetha Subash Apr 27, 2022 05:38 AM GMT
Swetha Subash

Swetha Subash

in கல்வி
Report

நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்த பள்ளிகளில் மாணவர்கள் பெருமளவில் படித்து வரும் நிலையில், கேந்திரிய வித்யாலயா சங்கதன், திருத்தப்பட்ட சேர்க்கை வழிகாட்டுதல்களின்படி தற்போது எம்பிக்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது.

ஏற்கனவே, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக எம்.பிக்களின் பரிந்துரை கடிதம் வழங்கும் நடைமுறையை மத்திய கல்வி அமைச்சகம் நிறுத்தி வைத்திருந்தது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சிபாரிசு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை | No Mp Quotas In Kendriya Vidyalaya Schools

மேலும், மறு உத்தரவு வரும் வரை சிபாரிசு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்த கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தங்கள் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா 10 மாணவர்கள் சேர்க்கை இடங்களுக்கு பரிந்துரை செய்யும் நடைமுறை இருந்து வந்த நிலையில்,தற்போது எம்பிக்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.