இனி முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன்; ஏன்? விஷால்

Vishal Dhansika Marriage Viral Photos Relationship
By Sumathi Aug 29, 2025 01:19 PM GMT
Report

என்னோட படத்தில் முத்த காட்சிகள் இருக்காது என நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார்.

நடிகர் விஷால்

சென்னை தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தில் விஷால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,

vishal

“எல்லாருக்கும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்து வந்து கொண்டிருக்கிறது. எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

இதுதான் என்னுடைய கடைசி பேச்சுலர் பிறந்தநாள் கொண்டாட்டம். அனைவரின் ஆசிர்வாதத்தில் சாய் தன்ஷிகாவை நிச்சயம் செய்துள்ளேன். சாய் தன்ஷிகா பெயர் போட்ட மோதிரத்தை காண்பித்த விஷால். இன்னும் இரண்டு மாதத்திற்குள் நடிகர் சங்க கட்டிடத்தில் திறப்பு விழா காலமாக நடைபெறும்.

லட்சுமி மேனன் தலைமறைவு; தோழியுடன் சேர்ந்து ரகளை - வெளியான வீடியோ!

லட்சுமி மேனன் தலைமறைவு; தோழியுடன் சேர்ந்து ரகளை - வெளியான வீடியோ!

முத்தக்காட்சி கிடையாது

ஒன்பது வருடமாக காத்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் இரண்டு மாதத்தில் கட்டிடத்தின் வேலைகள் முடியப்போகிறது. என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சாய் தன்ஷிகா அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி முத்தக்காட்சிகளில் நடிக்க மாட்டேன்; ஏன்? விஷால் | No More Kissing Scenes In My Films Says Vishal

கடவுளாக அனுப்பிய தேவதை சாய் தன்ஷிகா, எங்கள் இருவரையும் வாழ்த்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். கட்டிடத்தின் திறப்பு விழாவிற்கு அடுத்த முகூர்த்தத்தில் என்னுடைய கல்யாணம் நடிகர் சங்கத்தில் தான் கல்யாணம் பண்ணுவேன் என்பது பிடிவாதம் இல்லை.

அது என்னுடைய சொல். ஒரு கட்டத்தில் நண்பர்கள், இன்னொரு கட்டத்தில் ஆசிரியர்கள், அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் அவர்களுடைய பேச்சைக் கேட்கின்றோம் என்றால் அது துணைவியார் பேச்சு தான் இருக்கும். காதல் திருமணத்தில் நல்லது, கெட்டது இருக்கிறது.

காதல் திருமணம் என்பது ஒரு புரிதலில் வரக்கூடியது. தாம்பத்திய வாழ்க்கை மட்டுமல்ல, எந்த விஷயத்தையும் ஈகோ இல்லாமல் மனநிலை இருந்தால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.16 வருடம் சாய்தன்சிகா எனக்கு நண்பர், நான் எந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டாலும் வந்து இருக்கக்கூடிய முதல் ஆள் அவர்தான்.

எல்லோரும் கல்யாணத்துக்காக தான் கட்டிடத்தின் வேலையை பார்வையிடுகிறார் என்று நினைக்கிறார்கள், ஆனால் அனைவரும் சேர்ந்தால் தான் வேலையை சீக்கிரம் முடிக்க முடியும்.

இதுதான் எங்களுடைய குறிக்கோள். திருமணத்துக்கு பின் காதல் படத்தில் நடிப்பேன் ஆனால் இனி என்னோட படத்தில் முத்த காட்சிகள் இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.