திரைப்படங்களில் இனி நடிக்கப்போவதில்லை - உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
தமிழக அமைச்சராக சென்னை ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின். உதயநிதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவ். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கால்களில் விழுந்து ஆசி பெற்றார்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உட்பட குடும்ப உறுப்பினர்கள், தமிழக அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நடிக்கப்போவதில்லை..
மேலும், உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், எப்போதும் வழிநடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன்.
பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன் என உறுதியளித்துள்ளார். தொடர்ந்து, இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை எனவும், கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் நடிக்க முடியாத சூழல் உள்ளது. மாமன்னன் தான் நடிகராக எனது கடைசி திரைப்படம் எனவும் தெரிவித்துள்ளார்.