மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Vaiko DMK
By Irumporai May 01, 2023 07:27 AM GMT
Report

மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் எண்ணம் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

 திமுகவுடன் இணைக்கவேண்டும்

கடந்த சில நாட்களுக்கு முன்பு வைகோவிற்கு அவை தலைவர் துரைசாமி கடிதம் எழுதினார்,அதில் மதிமுகவை அதன் தாய் கழகமான திமுகவுடன் இணைக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த விவாகராம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ : மதிமுக முக்கிய காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 70 சதவீதம் மதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. துரைசாமி அனுப்பிய கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளராக நான் அலட்சியப்படுத்துகிறேன்.   

மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ | No Merge The Mdmk With The Dmk Vaiko

வைகோ தகவல்

 இரண்டு வருடங்களுக்கு கட்சிக்கு வராமல் தற்போது அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். மதிமுகவை திமுகவுடன் இணைக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சிலவற்றை அலட்சியப்படுத்துகிறோம்; நிராகரிக்கிறோம்.

எல்லா இடங்களிலும் தேர்தல் அமைதியாக ஒற்றுமையாக நடந்தது. இனிமேல் அவரின் பேச்சுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன் எனக் கூறினார்.