தீர்வு இல்லையெனில் ஸ்டாலினைச் சந்திப்பதால் பயனில்லை - கார்கேவிடம் கனிமொழி அதிரடி!

Smt M. K. Kanimozhi Tamil nadu
By Vinoja Nov 29, 2026 08:56 AM GMT
Report

தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக திமுக எடுத்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர்கள் இன்று சென்னை வருகை தருகின்றனர்.

திருத்தப்பட்ட மசோதாவில் 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதால், அதனை திமுக ஆதரிப்பதாக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தீர்வு இல்லையெனில் ஸ்டாலினைச் சந்திப்பதால் பயனில்லை - கார்கேவிடம் கனிமொழி அதிரடி! | No Meeting With Stalin Kanimozhi To Kharge

இது திமுகவுக்குக் கிடைத்த வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், திமுகவின் முடிவை மாற்றும் நோக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று மாலை 4 மணியளவில் ஸ்டாலினைச் சந்திக்க உள்ளனர்.

கார்கேவிடம் கனிமொழி காட்டம்

இதற்கிடையில், டெல்லியில் இன்று காலை கனிமொழி எம்.பி.யைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம், “தமிழகத்தின் நலன் பாதிக்காத வகையில் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

இதற்கு மாற்றாக காங்கிரஸ் முன்வைக்கும் தீர்வு என்ன? தீர்வு இல்லையெனில் ஸ்டாலினைச் சந்திப்பதால் பயனில்லை” என கனிமொழி தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.