எத்தனை சோதனைகளை நடத்தினாலும், கிளைச்செயலாளர் கூட பயப்படமாட்டான் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நாகை மாவட்ட த்தில் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அப்போது இவ்விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி
எங்கள் தலைவர் கருணாநிதி
திமுகவில் இளைஞரணி, மீனவரணி என சார்பு அணிகள் உள்ளதுபோல பாஜகவின் சார்பு அணிகள்தான் சிபிஐ, அமலாக்கத்துறை என விமர்சித்தார். எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
உங்களை பார்த்து பயப்பட எங்கள் தலைவர் ஒன்றும் ஓ.பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிசாமியோ கிடையாது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஞாபகம் வச்சுகோங்க எனவும் கூறிய உதயநிதி ஸ்டாலின்
யாரும் பயப்படமாட்டோம்
திமுகவில் இளைஞரணி, மீனவரணி என சார்பு அணிகள் உள்ளதுபோல பாஜகவின் சார்பு அணிகள்தான் சிபிஐ, அமலாக்கத்துறை என விமர்சித்தார். எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். உங்களை பார்த்து பயப்பட எங்கள் தலைவர் ஒன்றும் ஓ.பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிசாமியோ கிடையாது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஞாபகம் வச்சுகோங்க எனவும் கூறினார்.
மேலும், அதிமுக ஆட்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் வீடுகளில் சோதனை நடந்தது. ஆனால், முடிவில் யாரையும் மத்திய பாஜக அரசு கைது செய்யவில்லை. எனவே, பாஜக எத்தனை சோதனைகளை நடத்தினாலும் திமுகவின் கிளைச்செயலாளர் கூட பயப்படமாட்டான் என கூறினார்.