நாளை முதல் மாஸ்க் தேவையிவில்லை பிரான்ஸ் பிரதமர் அறிவிப்பு!

covid19 lockdown mask frnace
By Irumporai Jun 16, 2021 01:37 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பிரான்ஸ் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இந்த மாதம் கடைசி வரை ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது

. இந்த நிலையில் அங்கு கொரோனா தடுப்பூசி அதிகமாக செலுத்தப்பட்டு வருவதாலும், கொரோனா தொற்று குறைந்து வருவதாலும் ஜூன் 20-ந்தேதியில் இருந்து கொரோனா ஊரடங்கு தளர்த்தப்படும் என பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணி வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார் .

பிரான்ஸில் தினசரி கொரோனா பாதிப்பு 3200 ஆக இருந்து வருகிறது. இதுபிரான்சில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு குறைவான பதிவு இதுவாகும்ஆகவே  பிரான்ஸ் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.