இவருக்கு இனி இந்திய அணியில் இடமே கிடைக்காது: சேவாக் கூறிய அதிர்ச்சி தகவல்
கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் தொடர்ந்து வீணடித்து வரும் மணிஷ் பாண்டேவிற்கு இனி அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரான விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் மணிஷ் பாண்டே, புவனேஷ்வர் குமார் போன்ற ஒரு சில அனுபவ வீரர்களும், அதிக இளம் வீரர்களும் இடம் பிடித்தனர். நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்ற நிலையில், இப்போட்டிகளில் சீனியர் வீரர்களை விட இளம் வீரர்களே மிரட்டல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனிடையே மூன்று ஒருநாள் போட்டிகளிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மணிஷ் பாண்டேவுக்கு எதிராக பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான விரேந்திர சேவாக்கும் தன் பங்கிற்கு மணிஷ் பாண்டே மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி ஒன்றில் மணிஷ் பாண்டே மற்றும் ஹர்திக் பாண்டியா தொடர்ச்சியாக சொதப்பி என்னை பெரிதும் அதிருப்தியடைய செய்துள்ளார்கள்.குறிப்பாக 3 போட்டிகளிலும் அணியில் இடம்பெற்று பேட்டிங் ஆடிய மனிஷ் பாண்டே ஒன்றில் கூட சரியாக ஆடவில்லை. எனவே அவருக்கு இனிமேலும் இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்று சேவாக் தெரிவித்துள்ளார்.