தீபாவை விவாகரத்து செய்யும் எண்ணம் துளியும் இல்லை.. இது குடும்பத் தகராறு தான் : பதறிய மாதவன்

By Irumporai Aug 30, 2022 06:39 AM GMT
Report

ஜெ.தீபாவை விவாகரத்து செய்யும் எண்ணம் துளியும் இல்லை என்று அவரது கணவன் மாதவன் விளக்கமளித்துள்ளார்.

தீபா மாதவன்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா மற்றும் அவரது கணவர் மாதவனுக்கு இடையே தகராறு வெடித்துள்ளதாகவும், இதன் காரணமாக அவர்கள் விவாகரத்து செய்யப்பட இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகின.

அத்துடன் மாதவன் தன்னை விவாகரத்து கேட்டு தொல்லை தருவதாக ஜெ.தீபா வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்து சிறிது நேரத்தில் அதை டெலிட் செய்து விட்டதாகவும் செய்திகள் வெளியான நிலையில் தற்போது மாதவன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

தீபாவை விவாகரத்து செய்யும் எண்ணம் துளியும் இல்லை.. இது குடும்பத் தகராறு தான் :  பதறிய  மாதவன் | No Intention Divorcing J Deepa Husband Madhavan

இது குறித்து தீபாவின் கணவர் மாதவன் வெளியிட்டுள்ள அறிகையில் : "எனது மனைவி தீபா, என்னைப் பற்றி அளித்த செய்தியினை மறுக்கிறேன். தீபாவின் உடல்நிலை குறித்து எனக்கு முழு அக்கறை உள்ளது.

இன்றும் நேசிக்கிறேன்

நான் தான் அவரை இன்றுவரை மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று முழுமையாக பார்த்துக்கொள்கிறேன் தற்பொழுது மருத்துவ சிகிச்சையில் உள்ளார். மருந்தின் தாக்கம் அவரிடத்தில் உள்ளது. அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் எனக்கு துளியும் இல்லை.

அதற்கான அவசியமும் இல்லை. சராசரியாக எல்லா வீடுகளிலும் நடக்கும் குடும்பத் தகராறுதான். அவர், ஏதோ கோபத்தில் வாட்ஸ்அப்பில் ஸ்டே்டஸ் போட்டுள்ளார். அவரை அன்று போல் இன்றும் நேசிக்கிறேன்.

தீபாவை விவாகரத்து செய்யும் எண்ணம் துளியும் இல்லை.. இது குடும்பத் தகராறு தான் :  பதறிய  மாதவன் | No Intention Divorcing J Deepa Husband Madhavan

அவர்மீது எள்ளளவும் மாறாத அன்பும் பிரியமும் கொண்டிருக்கிறேன். அவரை விவாகரத்து செய்யும் எண்ணம் துளியும் இல்லை. இதுவும் கடந்துப் போகும் என்று விளக்கமளித்துள்ளார்.

நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் என்பார்கள் இருவரும் கூடிவாழ்வதே அவர்களது நலம் விரும்பிகளின் விருப்பம். நமது விருப்பமும் .