மினி பஸ்சில் இவ்வளவு கட்டணமா? - ஷாக் ஆகும் பெண்கள்

Tn government Chennai mini bus No free service
By Petchi Avudaiappan Jun 21, 2021 03:03 PM GMT
Report

சாதாரண கட்டண பேருந்தில் பெண்களுக்கு இலவசம் என்ற அறிவிக்கப்பட்ட நிலையில், மினி பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் 50% பயணிகளுடன் பேருந்து சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

அதில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், மினி பேருந்துகளில் டிக்கெட் வசூலிக்கப்படுவதால் பெண்கள் வேதனை அடைந்துள்ளார்கள்.