சினிமாவை உலுக்கிய சுஷாந்த் சிங் மரணம் -CBI சொன்ன அதிர்ச்சி தகவல்!
சுஷாந்த் சிங் மரணம் கொலை என்பதற்கு ஆதாரம் இல்லை என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
சுஷாந்த் சிங்
பாலிவுட்டில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்தாராவில் உள்ள அவரது இல்லத்தில் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் விசாரணை நடத்திய மும்பை காவல்துறை, சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக கூறி வழக்கை முடித்தது. மேலும் நிலையில், அவருக்கு போதைப்பொருள் பழக்கம் இருந்ததாக கூறப்பட்டது.
இதனால் அவரது காதலியும், பிரபல பாலிவுட் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் செளபிக் சக்ரபோர்த்தி, சுஷாந்த் சிங்கின் மேலாளர் சாம்யூல் மிராண்டா ஆகியோர் சுஷாந்த் சிங்குக்கு போதைப்பொருட்களை சப்ளை செய்ததாக கூறி கைதுசெய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
CBI அதிர்ச்சி தகவல்
இதனையடுத்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு குற்றப்பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், நான்கரை ஆண்டு விசாரணைக்குப் பிறகு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ளது.
அதில், சுஷாந்த் சிங் வழக்கில் அனைத்து கோணங்களிலும் நடத்திய விசாரணையில், அவர் கொலை செய்யப்பட்டார் என்பதை நிரூபிக்க அறிவியல் ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறியுள்ளது.