‘‘மாமா உங்க பொண்ணு மனசு போதும் கட்டுன புடவையோட அனுப்பி வைங்க’’ -கேரள இளைஞரின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்!
வரதட்சணைக்காக மனைவியின் குடும்பத்தினரை அட்டைபோல் உறிஞ்சுபவர்களுக்கு மத்தியில் வரதட்சனையே வேண்டாம் என மணமகள் அணிந்திருந்த நகைகளை கூட மணமேடையிலே அவரது பெற்றோருக்கு திருப்பி தந்த இளைஞன் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார் .
நாதஸ்வர இசைக்கலைஞராக சதீஷ் பூர்வீகம் ஆலப்புழா இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சுருதி என்ற பெண்ணுக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமண நிச்சயத்தின் போதே தனக்கு மணமகள் வீட்டார் வரதட்சணையாக எதுவும் கொடுக்க வேண்டாம் என கூறிவிட்டார்.
மாப்பிள்ளை சொன்னால் என்ன நம்ம பொண்ணை எப்படி வெறுங் கழுத்தோடு பெண்ணை எப்படி அனுப்பவது என சுருதிக்கு 50 பவுன் நகைபோட்டுள்ளனர் பெண்வீட்டார்.
அதன்படி திருமணத்தின்போது மணப்பெண் சுருதி தன் வீட்டார் கொடுத்த சீதனமான 50 பவுன் நகை அணிந்து மணமேடைக்கு வந்தார்.
வரதட்சனையே வேண்டாம் எனக் கூறிவிட்டேன். நீ அணிந்திருக்கும் இந்த நகைகளும் வரதட்சணை கணக்கில்தான் சேரும் என மணப்பெண் சுருதியிடம் கூறி விருப்பப்பட்டால் இரண்டு வளையல்கள் மட்டும் அணிந்துக்கொள்ளட்டும் மற்றவை எல்லாம் அவரது குடும்பத்தினரிடம் திருப்பி கொடுத்துவிடட்டும் எனக் கூறிவிட்டார்.
திருமணம் முடிந்த கையோடு சுருதி அணிந்திருந்த நகைகளை ஊர் பெரியவர்கள் முன்னிலையில் அவரது குடும்பத்தினரிடமே திருப்பி கொடுத்து விட்டார்.
எனக்கு உங்க பொன்னு மனசுதான் முக்கியம் நகை முக்கியம் இல்லை என படத்தில் தான் இந்த நிகழ்வினை பார்த்திருப்போம் தற்போது நிஜத்தில் கேரளத்தில் அரேங்கேறியுள்ளது.
மேலும் கேரளத்தில் வரதட்சனை கொடுமையால் பல பெண்கள்பலியாகி வரும் நிலையில் .சதீஷ் செயல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. சதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.