இனிமே எந்த கட்டுப்பாடும் இல்லை.. ஊரடங்கை முழுமையாக தளர்த்திய தெலங்கானா

lockdown telugana
By Irumporai Jun 19, 2021 11:19 AM GMT
Report

தெலங்கானா மாநிலத்தில் .ஊரடங்கு முழுவதுமாக வாபஸ் பெறப்படுவதாக அம் மாநில அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா 2ம் அலை பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது இதனால் பல மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இந்த நிலையில்  தெலுங்கான அரசு அதிரடி நடவடிக்கையாக தெலங்கானா மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு முற்றிலுமாக வாபஸ் பெற அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது .

தெலுங்கானவில் கொரோனா தொற்று விகிதம் குறைந்து வருவதால் தெலங்கானா அரசு இந்த முடிவை எடுத்துள்ளது

அதன்படி ஊரடங்கின் போது விதிக்கப்பட்ட அனைத்து வகையான விதிகளும் கட்டுப்பாடுகள் வாபஸ் பெறப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஆகவே நாட்டிலேயே முதன் முறையாக முதல் மாநிலமாக தெலங்கானா மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தபடுகிறது.