கண்ணுக்கு எட்டிய துாரம் வரை காங்கிரஸாரைக் காணவில்லை - செல்லுார் ராஜு விமர்சனம்

Indian National Congress ADMK DMK AIADMK Erode
By Thahir Feb 12, 2023 06:51 AM GMT
Report

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கண்ணுக்கு எட்டிய துாரம் காங்கிரஜாரை காணவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு விமர்சித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு விமர்சனம்

ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’ அதிமுக அற்புதமான வெற்றியைப் பெறும் என்ற நிலை உள்ளது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கதர் சட்டைகளைக் காணவில்லை, திமுக அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் தான் உள்ளனர்.

இங்கு காங்கிரஸ் தானே போட்டியிடுகிறது? ஆனால், அவர்கள் ஓட்டு கேட்க வரவில்லை. ஆனால், திமுகவினர் தான் வருகிறார்கள் என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர்.

no-congressmen-as-far-as-the-eye-can-see-sellur-k--raju

முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களின் எதிர்ப்பை பெரிய அளவில் சம்பாத்தித்து விட்டார் என்பதால் தோல்வி பயம் காரணமாகவே காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்கி உள்ளனர். பொய்யான வாக்குறுதிகளை மீண்டும் அளித்து இந்த தொகுதி மக்களின் வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கிறார்கள். அது நடக்காது.

பகுத்தறிவு கட்சி என கூறுகிறார்கள். குடுகுடுப்பைக்காரரை வைத்து வாக்குக் கேட்கிறார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு பயத்தில் உள்ளார்கள் என்பது தெரிகிறது. மக்கள் நிச்சயம் அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள்’ என்றார்.