பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்? ராமதாஸ் தகவல்
அன்புமணி குறித்து முக்கிய தகவலை ராமதாஸ் பகிர்ந்துள்ளார்.
அன்புமணியுடன் மோதல்
பாமக தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்படுவதாகவும், இனி பாமக தலைவராக நான் தான் என ராமதாஸ் அறிவித்தார். தொடர்ந்து வன்னியர் சங்க மாநாட்டில் அன்புமணியை எச்சரிக்கும் வகையில் ராமதாஸ் பேசினார்.
மேலும், புத்தக வெளியீட்டை புறக்கணித்தார். பாமக தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு ராமதாஸ் அழைப்பு விடுத்தார். ஆனால் அதில் அன்புமணி மற்றும் 95% நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை.
இவ்வாறு இருவருக்கும் மோதல்போக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாமக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், வன்னிய சமுதாயத்தில் எழுத படிக்க தெரியாமல் இருந்தார்கள்.
ராமதாஸ் தகவல்
கை ரேகை தான் பதிவு செய்தார்கள். இன்று ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ளேன். நீதிபதிகளை உருவாக்கியுள்ளேன். இந்திய அளவில் சமூக நீதியை பேசுவது நான் ஒருவன்தான். நான் மட்டும்தான் அதை பேச முடியும். என்னை விட்டால் வேறு யாரும் பேச முடியாது.
மற்றவர்களுக்கு அதைப் பற்றித் தெரியாது. எனக்கும் அன்புமணிக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை. வரும் நாட்களில் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் அன்புமணி கலந்து கொள்வார். பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கபோவதாக வதந்திகளை கிளப்பி விடுகின்றனர்.
அவர்கள் யார் என எனக்கு தெரியும். பாமக நான் உருவாக்கிய கட்சி. அன்புமணியை நானே கட்சியில் இருந்து நீக்குவேனா? என கேட்டுள்ளார்.