மீண்டும் இணைவதற்கு வாய்ப்பில்லை - ஓ.பி.எஸ் , இ.பி.எஸ் தரப்பு திட்டவட்டம்

Tamil nadu AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Thahir Jul 29, 2022 07:26 AM GMT
Report

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடரலாம். 3 வாரங்களுக்குள் உயர்நீதிமன்றம் முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு வழக்கு 

அதிமுக பொதுக்குழு கடந்த 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. தன்னை நீக்கியது செல்லாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மீண்டும் இணைவதற்கு வாய்ப்பில்லை - ஓ.பி.எஸ் , இ.பி.எஸ் தரப்பு திட்டவட்டம் | No Chance Of Reunion Ops Eps

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டு இருந்தது. பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சட்ட விதிகள் மீறப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தார். இதை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ஓ.பி.எஸ் , இ.பி.எஸ் தரப்பு திட்டவட்டம்

இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் முக்கியமான பல விதிகள் மீறப்பட்டதாகவும், என்னுடைய ஒப்புதல் இல்லாமல் பொதுக்குழு நடந்துள்ளதாகவும் என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கட்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிகபட்சமாக 3 வாரத்திற்குள் இந்த வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போது நீதிபதிகள் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதா? சமரசம் செய்து கொள்ள தயாரா? என இரு தரப்பினரிடமும் கேள்வி எழுப்பினர். அப்போது இரு தரப்பும் மீண்டும் இணைவதற்கு வாய்ப்பிள்லை என திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.