சாதி, மதமற்றவர்: பார்த்திபனுக்கு சான்றிதழ் வழங்க நீதிபதி உத்தரவு

R. Parthiban
By Fathima Apr 21, 2026 06:38 AM GMT
Report

பிரபல நடிகர் பார்த்திபனுக்கு சாதி மதமற்றவர் சான்றிதழ் வழங்குமாறு சோழிங்கநல்லூர் வட்டாசியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பார்த்திபன் பேசியது சர்ச்சையை கிளப்பியது, அதுகுறித்து விளக்கம் அளித்த பார்த்திபன் சாதி மதமற்றவர் என அறிவித்தார்.

மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனக்கு சாதி, மதமற்றவர் என சான்றிதழ் வழங்க வேண்டும் என சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தேன்.

சாதி, மதமற்றவர்: பார்த்திபனுக்கு சான்றிதழ் வழங்க நீதிபதி உத்தரவு | No Caste No Religion Partiban Document

ஆனால் எனது விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை, எனவே சான்றிதழ் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்த நிலையில், பார்த்திபனுக்கு ‘சாதி, மதமற்றவர்’ என சான்றிதழ் வழங்க சோழிங்கநல்லூர் வட்டாட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டதுடன், விண்ணப்பத்தின் நகலை ஏப்.29 அன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

சாதி, மதமற்றவர்: பார்த்திபனுக்கு சான்றிதழ் வழங்க நீதிபதி உத்தரவு | No Caste No Religion Partiban Document