டிக்கெட் வேண்டாம் என்று கூறிய மூதாட்டி மீது வழக்குப்பதிவு இல்லை - எஸ்.பி பரபரப்பு பேட்டி
டிக்கெட் வேண்டாம் என்று கூறிய மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மூதாட்டி வீடியோ வைரல்
பேருந்தில் நடத்தினரிடம் டிக்கெட் வேண்டாம் என்று வாக்குவாதம் செய்த மூதாட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அண்மையில் அரசுப் பேருந்தில் சென்ற மூதாட்டி துளசியம்மாள் என்பவர் எனக்கு ஓசி டிக்கெட் வேண்டாம் எனக் கூறி நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் தமிழகமே ஓசி டிக்கெட்டில் வந்தாலும் நான் வர மாட்டேன். இந்தா காசு பிடி எனக் கூறி நடத்துநரிடம் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்றார்.
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், திமுக ஐடிவிங்கைச் சார்ந்த ராஜீவ் காந்தி அதிமுக ஐடிவிங்கைச் சார்ந்தவர்கள் வேண்டுமென்றே பிரச்சனை செய்ய வைத்து வீடியோ எடுத்து பதிவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
எஸ்பி மறுப்பு
இந்த நிலையில் இன்று மூதாட்டி துளசியம்மாள் மீதும் அதிமுகவினர் 3 பேர் மீதும் திமுக ஆட்சி குறித்து அவதுாறு பரப்பியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது முற்றிலும் தவறான தகவல் என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிஎஸ்ஆர் காப்பி வெளியானதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிதற்கு, அது போலியானது இது குறித்து விசாரிப்பதாக பேசினார்.
மூதாட்டியை தவிர்த்து மற்ற 3 பேர் மீது தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.