1.70 கோடி புத்தகங்கள் கொள்முதலில் முறைகேடு – அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு!

Tamil nadu TVK C Joseph Vijay
By Vinoja Nov 17, 2026 08:54 AM GMT
Report

கடந்த திமுக ஆட்சியில், மூன்று ஆண்டுகளில் சுமார் 1.70 கோடி புத்தகங்கள் ஒரே பதிப்பகத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து ஏழு இடங்களில் சோதனை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும், சம்பந்தப்பட்ட பதிப்பக உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

1.70 கோடி புத்தகங்கள் கொள்முதலில் முறைகேடு – அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு! | No Books Purchased Under Vijay S Government

லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை – பதிப்பக உரிமையாளர் கைது

இந்த முறைகேட்டில் அரசியல் பின்புலம் இருந்தாலும், தொடர்புடைய அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர், நூலகங்களில் உள்ள தரமற்ற புத்தகங்கள் நீக்கப்பட்டு, தரமான புத்தகங்கள் இடம்பெறச் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், எதிர்காலத்தில் புத்தகக் கொள்முதலுக்குப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் என்றும், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தற்போதைய ஆட்சியில் இதுவரை ஒரு புத்தகம்கூட கொள்முதல் செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாகக் கூறினார்.