மதம் மாறியவர்களுக்கு BC சான்றிதழ் வழங்க முடியாது - உச்சநீதிமன்றம்!

India Madras High Court
By Vinoja Oct 15, 2026 07:23 AM GMT
Report

இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் (BC) சாதிச் சான்றிதழ் வழங்க முடியாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

2015ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறிய பரமசிவம் என்பவர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்தார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றது.

மதம் மாறியவர்களுக்கு BC சான்றிதழ் வழங்க முடியாது - உச்சநீதிமன்றம்! | No Bc Certificate For Converted Persons

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தற்போது அந்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், மதம் மாறியதன் அடிப்படையில் மட்டும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் சாதிச் சான்றிதழ் பெற முடியாது. என்பதும், மதமாற்றம் மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்கான தகுதியை ஏற்படுத்தாது என்பதும் இந்த வழக்கின் முக்கிய அம்சங்களாகும்.