பாஜகவுடன் திமுக கூட்டணியா? சிங்கப்பூர் நாளிதழுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி

M K Stalin DMK
By Irumporai May 29, 2023 03:31 AM GMT
Report

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் சமீபத்தில் சிங்கப்பூருக்கு சுற்று பயணம் செய்த போது சிங்கப்பூர் தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பாஜகவுடன் எந்த காரணத்தை முன்னிட்டு திமுக கூட்டணி வைக்காது என்று கூறினார்.

 பாஜகவுடன் கூட்டணி

கருணாநிதி காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு வாஜ்பாய் ஒருவர் தான் காரணம் என்றும் வாஜ்பாய் காலத்தில் உள்ள பாஜகவுக்கும் தற்போது உள்ள பாஜகவிற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது என்றும் எனவே பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கான பேச்சுவார்த்தையை நடைபெறாது என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜகவுடன் திமுக கூட்டணியா? சிங்கப்பூர் நாளிதழுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி | No Alliance With Bjp Says Cm Stalin

 உதவிக்கரம் நீட்டுவோம்

மேலும் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக பணி செய்து வருகிறார் என்றும் அவர் கூறினார். மேலும் வட மாநில தொழிலாளர்களால் தமிழ்நாட்டிற்கு நன்மைதான் என்றும் உலகில் எந்த பகுதியில் தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் உதவிக்கரம் நீட்டுவோம் என்றும் முதலமைச்சர் கூறினார்.