முறிந்தது கூட்டணி..மா.செ கூட்டத்தில் அதிரடியாக முடிவெடுத்த அதிமுக
பாஜகவுடனான கூட்டணி முறிந்ததாக தற்போது நடைபெற்று முடிந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முறிந்ததாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கண்டனம்
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை முதலில் விமர்சித்தார். அப்போது அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டிய எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலைக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்தார்.
அதன்பிறகு சமீபத்தில் அண்ணாமலை அறிஞர் அண்ணா குறித்து தவறான செய்தியை கூறினார். இதனால் அதிமுக-வினர் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார், அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து உறுதியாக கூறினார்.
மா.செ கூட்டம்
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தையும் கூட்டியுள்ளார். பாஜகவுடனான கூட்டணி இல்லை என்கிற முடிவில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமையிலான புதிய கூட்டணி குறித்த விவாதங்களையும் நடத்த தொடங்கிவிட்டார்.
இதில், கூட்டணி குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என கருத்துக்கள் தீவிரமாக எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிரடியான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முறிந்த கூட்டணி
கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுகாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி, அண்ணாமலையின் பேச்சுக்கள் அதிமுக தொண்டர்களை அதிருப்தியை ஏற்படுத்தி நிலையில்,தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். இதனை அங்கு குழுமியிருந்த அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.