திரையுலகில் சிவகார்த்திகேயனுக்கு நடந்த கொடுமைகள்.. உண்மையை சொன்ன பிரபல தயாரிப்பாளர்
தமிழ் திரையுலகில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நடந்த கொடுமைகள் குறித்து பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனது அசத்தலான நடிப்பால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டான் படம் மீண்டும் அவருக்கு ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. இதனால் தமிழைத் தொடர்ந்து கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல மொழிகளிலும் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது.
இதனிடையே தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு நடந்த கொடுமைகள் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தயாரிப்பாளர் ரவீந்தர் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர், சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மிகவும் அபாரமானது. பல நடிகர்கள் பல ஆண்டுகளாக செய்ததை சிவகார்த்திகேயன் மிகக் குறுகிய காலகட்டத்திலேயே செய்ததால் அது சிலருக்கு பிடிக்காமல் போனது என கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட பாலிவுட்டில் சுஷாந்த்துக்கு நடந்த கொடுமை மாதிரியே சிவகார்த்திகேயனுக்கும் கொடுமைகள் நடந்தது. ஆனால் அவர் அதனை திறமையாக கையாண்டார் என தயாரிப்பாளர் ரவீந்தர் கூறியுள்ளார்.