மிரட்டும் வானிலை : தமிழக துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலைக் காரணமாக தமிழகம் -புதுச்சேரி ஆந்திர கடலோர பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சூறைக்காற்று வீசும்
இதன் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் ஆந்திர கடலோர பகுதிகள், தமிழக, புதுச்சேரி கடலோர பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என கூறியுள்ளது.
3 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
அதேபோல மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதன் காரணமாக சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்
றப்பட்டுள்ளது. பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கூறியுள்ளது.